முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

ஸ்டாலின் வெற்றிபெற்றதற்காக நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்!

மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக பெண் ஒருவர் வேண்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றிருப்பதால் தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் ஸ்டாலின் வெற்றி பெற்று வரும் 7ம் தேதி முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி வனிதா (32) இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்து உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நாக்கை அறுத்துக் கொண்டார். கோவில் திறக்காததால் நாக்கினை வாசல்படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். பின்னர் அந்த பெண்ணை பொதுமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மேட்டூர் அணையிலிருந்து நாளை தண்ணீர் திறக்கப்படும்-அமைச்சர் துரை முருகன்

Web Editor

அதிமுக போராட்டம்; அமைச்சர் சேகர்பாபு பதிலடி

Arivazhagan Chinnasamy

B.E., B.Tech., படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்

Halley Karthik