பக்கத்து வீட்டு பெண்ணை ஆசிட் குடிக்க வைத்து, கத்தியால் குத்திய கொடூரம்!

பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட மோதலில் பெண்ணை ஆசிட் குடிக்க வைத்து, கத்தியால் குத்திய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசிம்பூர் பகுதியை சேர்ந்தவர் சத்யேந்திர சிங். அவர் அடிக்கடி பக்கத்து வீட்டில் வசித்து…

பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட மோதலில் பெண்ணை ஆசிட் குடிக்க வைத்து, கத்தியால் குத்திய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காசிம்பூர் பகுதியை சேர்ந்தவர் சத்யேந்திர சிங். அவர் அடிக்கடி பக்கத்து வீட்டில் வசித்து வரும் பெண்ணிடம் மோதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு நாள் இரவு இருவருக்கு வாக்குவாதம் முற்றிய நிலையில், அப்பெண்ணை ஆசிட் குடிக்க வைத்து, பின்னர் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் அறிந்து பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் அப்பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை செய்த நபரை கைது செய்தனர். பின்னர், இச்சம்பவத்துகான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply