அதிமுக- அமமுக இணைய வாய்ப்பு கிடையாது: ஜெயக்குமார்!

அதிமுக- அமமுக இணைய வாய்ப்பு கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு தெரிவித்தார். 2021-ல் தமிழகத்தில் அதிமுக தான் மீண்டும்…

அதிமுக- அமமுக இணைய வாய்ப்பு கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு தெரிவித்தார். 2021-ல் தமிழகத்தில் அதிமுக தான் மீண்டும் ஆட்சியமைக்கும் எனவும், எதிர்க்கட்சியாக இருக்கக்கூட தகுதியில்லாத கட்சியாக திமுக மாறியுள்ளது, என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

கட்சியை முடக்க நினைத்தவர்கள், அதிமுகவை உரிமை கொண்டாட எந்த தார்மீக உரிமையும் இல்லை எனவும், அதிமுக -அமமுக இணைய வாய்ப்பு கிடையாது, எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், கட்டுமான பணிகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக தான், ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த சசிகலா தொற்றில் இருந்து மீண்டு வந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் தமிழகம் திரும்பவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் கூட்டணி தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply