முன்கூட்டியே நிறைவடையும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் 7-ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 29-ம்…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் 7-ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 29-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்வது தொடர்பாக, அலுவலக பரிந்துரை குழு ஆலோசனை மேற்கொண்டது. இதில், நாளை மறுநாளுடன் கூட்டத் தொடரை முடித்துக்கொள்வது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நிகழ்ந்த மோதல் விவகாரம் தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவடைய உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.