40 அடி கிணற்றில் விழுந்தக் காட்டெருமையை மீட்ட தீயணைப்புத் துறையினர்!

குன்னூரில் 40 அடி கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமையை 10 மணி நேரத்திற்கும் மேலாக வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். குன்னூர் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் இடத்தில்…

குன்னூரில் 40 அடி கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமையை 10 மணி நேரத்திற்கும்
மேலாக வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.

குன்னூர் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் இடத்தில் பாழடைந்த கிணறு ஒன்று நீண்ட காலமாகப் பராமரிப்பு இல்லாமல் சுற்றிலும் புதர்கள்
மண்டி காணப்பட்டது. அவ்வழியே சென்ற காட்டெருமை ஒன்று பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து சுமார் 40 அடி கொண்ட கிணற்றில் தெரியாத அளவிற்கு ஆழமாகச் சென்றுவிட்டது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற
வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றை பொக்லைன் கொண்டு தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.

40 அடி வரை தோண்டி பின்னர் காட்டெருமையைப் பத்திரமாக மீட்டனர். சுமார் பத்து மணி நேரத்திற்கும் மேல் போராடி வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் காட்டெருமையினைப் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள்
விரட்டினர்.

—ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.