காதல் கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி; ஆந்திராவில் அரங்கேறிய கொடூரம்!

ஆந்திராவில் காதல் கணவரை கத்தியால் குத்தி மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள மலக்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பவானி மற்றும் தாலப்புடி கிராமத்தை சேர்ந்த தாத்தாஜி…

ஆந்திராவில் காதல் கணவரை கத்தியால் குத்தி மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள மலக்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பவானி மற்றும் தாலப்புடி கிராமத்தை சேர்ந்த தாத்தாஜி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். காதல் திருமணம் செய்து கொண்ட பின், அலைபாயுதே சினிமா பாணியில் இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் ஊரறிய திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி வந்த பவானியின் கோரிக்கையை தாத்தாஜி தட்டிக்கழிக்கவே, தாத்தாஜி மீது பவானிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இருவரும் சந்திக்கலாம் என கூறி தாத்தாஜியை தனது ஊருக்கு அழைத்த பவானி, தன்னை சந்திக்க வந்த தாத்தாஜியை மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் பவானியின் பெற்றோர் தான் இந்த கொலைக்கு காரணம் என தாத்தாஜியின் தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply