முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளிகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

பள்ளிகள் திறப்பையொட்டி, தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இணையவழி கற்றல் முறை மாற்று கற்பித்தல் முறையாக தொடர்ந்து இருக்கும். அதாவது மாணவர்கள் பள்ளிக்கு வராமல், இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பினால், அதற்கு அனுமதி அளிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தனியார் பள்ளிகள் எழுத்துப்பூர்வ இசைவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்த பிறகு பள்ளிகளை மீண்டும் திறக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து மாணவர்களுக்கு வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் சுகாதார துறையால் வழங்கப்படவிருக்கின்றன.

அனைத்து பள்ளிகளிலும் உடல்வெப்ப பரிசோதனை கருவிகள், கிருகிநாசினிகள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கல்வி மற்றும் விளையாட்டுக்கான பாடவேளைகள் அனுமதிக்கப்படாது. இதுமட்டுமல்லாமல் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை கழுவுவது உள்ளிட்ட கொரோனா தொடர்பான அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திரைப்படத்தை சோழ தேசத்தில் பார்த்தது பெரும் மகிழ்ச்சி – நடிகர் பார்த்திபன்

EZHILARASAN D

ஒரே நாளில் 2 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

Gayathri Venkatesan

அப்பாவி பொதுமக்கள் அதிக அளவில் உயிரிழந்து வருவதாக உக்ரைன் குற்றச்சாட்டு

Arivazhagan Chinnasamy

Leave a Reply