வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘விக்ரம்-1 ’ ராக்கெட்…!

இந்தியாவின் முதல் தனியார் சுற்று வட்ட ராட்கெட்டான ‘விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்தியாவின் முதல் தனியார் சுற்று வட்ட ராட்கெட்டான ‘விக்ரம்-1 ’-ன்னை ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மிஷன் ஆகமன் என்னும் ஏவுதல் திட்டத்தின் படி இந்த ராக்கெட் ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் (SDSC-SHAR) முதல் ஏவுதளத்திலிருந்து மதியம் 12:05 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

முதலில் இந்த ராக்கெட் இன்று காலை 11:30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தொழிற்நுட்ப கோளாறு காரணமாக ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டு மதியம் 12:05 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.