முக்கியச் செய்திகள் குற்றம்

காதலி இறந்த சோகம்: ஸ்டேட்டஸ் வைத்து இளைஞர் தற்கொலை

மதுரை அருகே காதலி இறந்த சோகத்தில் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி ஆவடையாபுரம் பகுதியை சேர்ந்த பிரபு கார்த்தி என்ற இளைஞர் நேற்று பெரியமேடு அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார். அப்போது, அவர் தூக்கு கயிறுடன் செல்பி எடுத்து அனைவருக்கும் நன்றி எனவும், பெற்றோர் மன்னித்து விடுங்கள் எனவும் கூறி தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதனைக் கண்ட அவரது நண்பர்கள், பிரபு கார்த்தி செல்போனுக்குத் தொடர்பு கொண்ட நிலையில் அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: கொரோனா குணமடைந்த பிறகு ஆஜராவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடிதம்

பின்னர் அவர் தங்கி இருந்த விடுதிக்கு சென்று பார்த்த போது அறை பூட்டி இருந்ததால் பெரியமேடு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்த போது பிரபு கார்த்தி தூக்கில் தொங்கியபடி சடலமாகக் கிடந்துள்ளார். சடலத்தை மீட்ட போலீசார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தீபா என்ற பெண்ணை பிரபு காதலித்து வந்ததும், சென்ற மாதம் தீபா இறந்ததில் இருந்து பிரபு மன உளைச்சலில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குபதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மு.க. ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!

Gayathri Venkatesan

அரசு மருத்துவமனையில் 5 குழந்தைகள் உயிரிழப்பு; உறவினர்கள் போராட்டம்

G SaravanaKumar

ஒவ்வாத பழமைவாதங்களும், மூடக்கருத்துகளும் கல்வியில் திணிக்கப்படுகிறது:முதலமைச்சர்

G SaravanaKumar