வெளியானது ‘கங்குவா’ படத்தின் ‘மன்னிப்பு’ வீடியோ பாடல்!

கங்குவா படத்தின் ‘மன்னிப்பு’ என்ற பாடலின் வீடியோ வெளியாகி  வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி…

கங்குவா படத்தின் ‘மன்னிப்பு’ என்ற பாடலின் வீடியோ வெளியாகி  வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

வெற்றி ஒளிப்பதிவு செய்த இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 11,500 திரையரங்குகளில் கடந்த 14-ந் தேதி வெளியானது. மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள் : T20 – ஆஸ்திரேலியாவுக்கு 118 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான் அணி!

இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. இந்நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் மன்னிப்பு என்ற பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை ரகு திக்ஷித் பாடி இருக்கும் நிலையில் விவேகா இந்த பாடல் வரிகளை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.