போதிய திட்டமிடல்கள் இல்லாததே கிளம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்க காலதாமதத்திற்கு காரணமாக அமைந்தது என அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்க, காலதாமதம் ஆவதற்கு கடந்த ஆட்சி காலத்தில் போதுமான திட்டமிடல்கள் இல்லாததே காரணம் என அமைச்சர் சேகர்பாபு
விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
இயற்கை வனப்புடன் நகர்ப்புற பொது சதுக்கம் போன்ற நவீன நகர்ப்புற வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் அமைச்சர்கள் சேகர்
பாபு, ராமச்சந்திரன் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள், துறையின் செயலாளர்கள்
பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது:
முதலமைச்சர் மிக முக்கியமான திட்டங்களை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி இந்த திட்டமும் விரைவில் டெண்டர் விடுவதற்கான
செயல்பாடுகள் மற்றும் இதற்கான இறுதி வடிவம் கொடுத்து பணிகளை முதலமைச்சர்
மேற்கொண்டு வருவதால் எவ்வளவு விரைவாக முடியுமோ அந்த அளவில் விரைவாக பணிகள் தொடங்கும். உலக தரம் வாய்ந்த சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்த திட்டம் இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் பன்னடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டுவதற்கு சென்னை மாநகர பகுதிகளில் கட்ட அனுமதி பெரும் நடைமுறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில்
இருந்து மீண்டும் அரசிடமே அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை வந்திருப்பது
மக்கள் எளிதில் அதன் மூலம் பயன் பெறவே என விளக்கம் அளித்தார்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் இந்த ஆண்டு 50 திட்டங்களை
செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டும். இன்னும் பேருந்து நிலையம் திறக்கப்படாமல் இருக்க காரணம் கடந்த ஆட்சி காலத்தில் பேருந்து நிலையம் கட்டும்பொழுது முறையான திட்டமிடல்கள் இன்றி கட்டப்பட்டதால் சிறு மழைக்கே பேருந்து நிலையத்திற்குள் மழை நீர் தேங்கி விடுகிறது,
அந்த மழை நீர் வடிவதற்கான கால்வாய் அமைக்கும் பணிகள் ரூ13 கோடி செலவில் தற்போது நடைபெற்று வருவகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து கூடுதலாக 25 சதவீதம் செலவாகியுள்ளது.
பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின்பு மக்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்பதற்காக போர் கால அடிப்படையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், பணிகள் நடைபெற்று வருகிறது. அயனம்பாக்கத்தை கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தோடு
இணைக்கும் சாலையை அமைத்து கொண்டு இருக்கிறோம். கூடுவாஞ்சேரியில் இருந்து கிளாம்பாக்கம் வரைக்கும் மற்றொரு சாலையை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளோம். முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பளவில் ஆம்னி பேருந்து நிலையம்
அமைப்பதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு அந்த பணிகளையும் முதலமைச்சர் கரங்களால்
விரைவில் துவக்கி வைக்க இருக்கிறோம் என தெரிவித்தார்.
ரெ. வீரம்மாதேவி







