சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களை ஆர்டிஐ-ல் இருந்து விலக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு பெல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “வெளிப்படையான அரசு என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, நான்கே மாதங்களில் மக்களை கேள்வி கேட்கக்கூடாது என்கிறது.
500க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்தும், சட்டம் ஒழுங்கைச் சீர்செய்ய திறனற்ற அரசு,
இப்போது தனது தவறை மறைக்க, சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களையே மக்கள் கேட்க முடியாதபடி RTI உரிமையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது வெட்கக்கேடானது. இதுதான் மாற்றமா?” என்றார்.




