ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’ ரூ.150 கோடி வசூலை கடந்தது!

ரவிதேஜாவின் இருமுடிகட்டு திரைப்படம் வெள்இயாகி 9 நாட்களில் ரூ.150 கோடிவசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜாவின் 77-வது திரைப்படமான ‘இருமுடி கட்டு’ படம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி வெளியானது. வெளியாவதற்கு முன்பே இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருந்த நிலையில் திரையில் வெளியான பிறகு பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை ‘மஜிலி’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சிவ நிர்வாணா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியா பவானி சங்கர், சாய் குமார், பேபி நக்ஷத்திரா முஆகியோர் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ‘இருமுடி கட்டு’ ‘வில்லாதி வில்லனே ஆகிய பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. வெளியானது முதலே வசூலை குவித்துவந்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி 100 கோடி வசிலித்தது. இந்த நிலையில் இருமுடி கட்டு வெளியாகி ல் 9 நாட்களில் ரூ. 150 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுவரை 70 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு மட்டுமே செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவ்ல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.