தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கியுள்ள படம் ராயன். இது அவரது 50-ஆவது திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.…

தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கியுள்ள படம் ராயன். இது அவரது 50-ஆவது திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து 5 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

தனுஷுக்கு கேப்டன் மில்லர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை தரவில்லை. இதனால் ராயன் திரைப்படம் அவருக்கு சூப்பர் ஹிட் ஆக அமையுமா என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். வடசென்னையை பின்னணியாக கொண்டு ராயன் படத்திற்கு தனுஷ் கதைக்களம் அமைத்துள்ளார்.

இந்நிலையில் ராயன் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 1 நிமிடம் 49 வினாடிகள் ஓடக் கூடியதாக ட்ரெய்லர் கட் செய்யப்பட்டுள்ளது. ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள், விறுவிறுப்பாக இருப்பதாகவும், படத்தை பார்க்க தூண்டும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.