ஐஏஎஸ் அதிகாரியான பூஜா பணியில் சேர முறைகேடில் ஈடுப்பட்டதாக கூறிய நிலையில் அவரது பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கேர், மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்ட உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பூஜா ஐஏஎஸ் பணியில் சேர முறைகேடில் ஈடுப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
இது தொடர்பாக தனிநபர் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் பூஜா ஐ.ஏ.எஸ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர் என்றும், தனக்கு பார்வை மற்றும் மன இறுக்க குறைபாடு உள்ளதாக கூறி மாற்றுத்தினாளிகளுக்கான பிரிவில் வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, மகாராஷ்டிரா அரசு அனைத்து பணிகளிலிருந்தும் பூஜாவை விடுவித்துள்ளது.




