‘தக் லைஃப்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!…

கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு தக் லைஃப் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அடங்கிய டீசர் வெளியானது. தமிழ் சினிமாவின் மாபெரும் கூட்டணி கமல் ஹாசன் – மணி ரத்னம். இவர்கள் இருவரும் முதல் முறையாக இணைந்தபோது உருவான நாயகன்…

கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு தக் லைஃப் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அடங்கிய டீசர் வெளியானது.

தமிழ் சினிமாவின் மாபெரும் கூட்டணி கமல் ஹாசன் – மணி ரத்னம். இவர்கள் இருவரும் முதல் முறையாக இணைந்தபோது உருவான நாயகன் திரைப்படம் என்றுமே நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

நாயகன் படத்திற்கு பின் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் தக் லைஃப். கமல் ஹாசனுடன் இணைந்து இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். இன்று கமல் ஹாசனின் பிறந்தநாள் என்பதால் ரிலீஸ் தேதியை ஸ்பெஷல் டீசர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.