#Suriya44 ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்யாவின் 44-வது படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.…

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்யாவின் 44-வது படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 44’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை 2டி மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த திரைப்படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தின் டைட்டில் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில், ‘சூர்யா 44’ திரைப்படத்தை அடுத்தாண்டு மார்ச் மாதம் 28ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.