உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், உக்ரைனின் ஒடேசாவில் சிக்கியிருந்த மாணவர்கள் அனைவரும் ருமேனியா நாட்டிற்கு வந்துவிட்டதாகவும், அவர்கள் அனைவரும் சிறப்பு விமானங்கள் மூலமாக தாயகம் அழைத்து வரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அண்மைச் செய்தி: மதுராந்தகம் – மனைவியின் இறப்பிற்கு காரணமான கணவர் – உறவினர்கள் சாலை மறியல்
உக்ரைனில் இருந்து சுமார் 17 ஆயிரம் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாகவும், மீதம் உள்ள சுமார் 7 ஆயிரம் பேரை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும், வழக்கு விசாரணயை மார்ச் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








