நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிக்க போவதாக தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஈரோடு, சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் தமிழ் புலிகள் கட்சியின் ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறியதாவது,
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிக்க போவதாகவும், புஞ்சை புளியம்பட்டி மாட்டு இறைச்சி கடையை அகற்றி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் எனவும், பவானிசாகர் அணையில் ரசாயனம் கலந்த கழிவுநீரை தளபதி தடுத்த நிறுத்த வேண்டும் இல்லையெனில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனவும், சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பேட்டி அளித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், மாநில நிதி செயலாளர் அப்துல்லா மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அனகா காளமேகன்







