வெளியானது தமிழ் மாநில காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்!

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. நாட்டின் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்…

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

நாட்டின் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.  இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி, நாடாளுமன்ற தேர்தல்  ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது.  அதன்படி பாஜக 19 இடங்களிலும், பாமக 10 தொகுதிகளிலும், தமாகா 3 இடங்களில் களம் காண்கிறது.மேலும்,  பாஜக கூட்டணியில் அமமுக 2 இடங்களிலும், ஓபிஎஸ்சின் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு ஒரு தொகுதியில் களம் காண்கிறது.

பாஜக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ்,  ஈரோடு,  ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறது.  இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டார். 

தமாகா முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்:

  1. ஈரோடு – விஜயகுமார்
  2. ஸ்ரீபெரும்புதூர் – வேணுகோபால்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.