தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வரும் 22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலில், வரும் 22-ம் தேதி காலை பத்து முப்பது மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில், அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும், அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் தெரிகிறது.







