லியோவை தொடர்ந்து அடுத்து ஒரு படம் இயக்குவதாகவும், அதன் பிறகு கைதி 2 படம் இயக்க உள்ளதாகவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தன்னுடைய முதல் படத்திலேயே, ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர். தொடர்ந்து, நடிகர் கார்த்தியை வைத்து இவர் இயக்கிய ‘கைதி’, விஜய்யை வைத்து இயக்கிய ‘மாஸ்டர்’ மற்றும் கமல்ஹாசனை வைத்து இயக்கிய ‘விக்ரம்’ போன்ற படங்களை இயக்கி தவி ர்க்க முடியாத இயக்குனராக தடம் பதித்தார். தற்போது தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள லோகேஷ், ”லியோ” படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்நிலையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் லியோ படத்தின் படப்பிடிப்பு இப்போது தான் முடிந்துள்ளது எனவும் படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது எனவும் கூறினார்.
ரஜினியுடன் படம் இயக்குவது குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் லியோவை தொடர்ந்து அடுத்து ஒரு படம் இயக்குவதாக குறிப்பிட்ட அவர் தொடர்ந்து பிறகு கைதி 2 படம் இயக்க உள்ளதாகவும் லியோ அப்டேட் குறித்த கேள்விக்கு செப்டம்பர் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடக்கும் எனவும் கோவைக்கு விஜயை கூப்பிட்டு வர முயற்சி செய்கிறேன் எனவும் தெரிவித்தார்.







