தமிழ்நாடு சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிஉரை நிகழ்த்துவார். சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு, அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம்.
அந்த வகையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ் நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஆளுநர் உரை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் தமிழக அரசின் திட்டங்கள் மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குறைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு, சட்டமன்றத்தில் தரவுகளுடன் பதிலளிக்கும் வகையில் கருத்துகளை எடுத்துரைப்பதற்கும் அமைச்சரவையில் விவாதிக்கப்படும்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.







