செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சிறப்பாக நடக்க தொழிலாளர்கள் உழைப்பே காரணம்- விக்னேஷ் சிவன்

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க மற்றும் நிறைவு விழாவின் பின்புறத்தில் பத்தாயிரம் நபர் வேலை பாத்ததனால் தான் இவ்வளவு சிறப்பாக முடிந்ததற்கு காரணம் என இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்தார். கடந்த 28ம் தேதி…

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க மற்றும் நிறைவு விழாவின் பின்புறத்தில் பத்தாயிரம் நபர் வேலை பாத்ததனால் தான் இவ்வளவு சிறப்பாக முடிந்ததற்கு காரணம் என இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்தார்.

கடந்த 28ம் தேதி தொடங்கிய 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று நிறைவடைந்தது.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. அதில் இந்திய ஓபன் பிரிவு இந்திய பி அணி மற்றும் மகளிர் இந்திய ஏ அணி வெண்கல பதக்கத்தை வென்றனர்.

விழா முடிந்த பின்னர் அவ்விழாவை முன்னின்று நடத்திய இயக்குனர் விக்னேஷ் சிவன்
செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தொடக்க விழா மிக சிறப்பாக நடந்தது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலர் பாராட்டினர்.


தமிழர்கள் பாரம்பரிய கலைகள் மற்றும் இந்தியா கலாசார நிகழ்வோடு அரங்கேறிய தொடக்க விழாவிற்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். இதுபோலவே நிறைவு விழாவும் மிக சிறப்பாக அமைய வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவர் ஆசைப்பட அதுவும் சிறப்பாகவே நடந்து முடிந்தது. குறிப்பாக மிக குறுகிய நாட்களில் இந்த நிகழ்வை நடத்த வேண்டிருந்தது.

மேலும் இந்த விழாவிற்கு பின்னர் பத்தாயிரம் நபர்கள் வேலை பார்த்திருகிறார்கள். அதனால் தான் நான் இங்கே உங்கள் முன்னாள் பேசிக்கொண்டு இருக்க முடிகிறது என்றார். தமிழ்நாட்டு கலாச்சாரம் என்பது அனைவருக்கும் புரிய வேண்டும். குழந்தைகள், வெளிநாட்டினர் மற்றும் பலர் உள்ளனர் என்பதால் visual media என்ற பயன்பாட்டை பயன்படுத்தினோம் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.