மூன்றாவது நாளாகத் தொடரும் குறவர் இன மக்களின் காத்திருப்புப் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் பழங்குடி குறவன் சங்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் ரவி தலைமையில் எஸ்.சி சான்றிதழ் கேட்டு சுமார் 200க்கும் மேற்பட்டப் பள்ளி மாணவ மாணவிகள் சீருடைகள்…

திருப்பத்தூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் பழங்குடி குறவன் சங்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் ரவி தலைமையில் எஸ்.சி சான்றிதழ் கேட்டு சுமார் 200க்கும் மேற்பட்டப் பள்ளி மாணவ மாணவிகள் சீருடைகள் அணிந்து மூன்றாவது நாளாகப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைகள்  (திருத்தப்பட்ட ) சட்டம் 1976 வரிசை எண் 36 இன் படி குறவன் இனத்துக் காண பட்டியல் வகுப்பு சான்றுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட அனைவருக்கும் குறவன் (எஸ்.சி.) ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் இரவு பகலாக தற்போதும் வட்டாட்சியர் அலுவலகத்திலேயே உணவு செய்து சாப்பிட்டு அங்கேயே மக்கள் உறங்கியும் வருகின்றனர்.

இதனை அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து குருவர் இன மக்கள் தகுதி வாய்ந்த நபர்களா என கண்டறியவும், அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்களின் பகுதிகளுக்கே சென்று ஆய்வு மேற்கொண்டு உடனடியாக அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கவும் ஆணையிட்டார்.

அதன் காரணமாக நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் தாசில்தார்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்ற நிலையில் திருப்பத்தூர் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் குறவர் இன மக்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களுடைய ஜாதி சான்றிதழ் வாங்கி சரிபார்த்து வரும் வேலையைச் செய்து வருகின்றனர்.

கா.ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.