ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் செய்த ஒருவரை வாகனத்துடன் கைது காவல்துறை செய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக் கடற்கரைச் சாலைப் பகுதியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டப் பொழுது சந்தேகத்து இடமாக வந்த டாடா சுமோ வாகனத்தில் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி கடத்திருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் வாகனத்தையும், ஓட்டுநர் ஐயப்பனையும், ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையின் போது, ஓட்டுநர் ஐயப்பனை விசாரித்ததில் 50 கிலோ எடை கொண்ட 35 சாக்கு பைகளில் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றை வெளி மாநிலத்திற்கு கடத்திக் கொண்டு செல்வதாகத் தெரியவந்துள்ளது. மேலும், ராமநாதபுரத்தில் சமீபக் காலமாக ரேஷன் அரிசிகள் கடத்தும் சம்பவம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-கா.ரூபி







