மகளிர் பிரீமியம் லீக் டி20 தொடர் மார்ச் 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மகளிர் போட்டிக்கான அதிகாரப்பூர்வமான பாடலை போட்டி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் நடைபெறுவது போன்று வீராங்கனைகளுக்கு மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு தொடங்க உள்ளது. மார்ச் 4-ம் தேதி மகளிர் பிரீமியர் லீக் தொடங்க உள்ளது.
இந்த டி20 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. 5 அணிகளும் 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. அதானி ஸ்போர்ட்ஸ் ஸ்லிங் நிறுவனம் அகமதாபாத் அணியை ரூ.1289 கோடிக்கும், இந்தியா வின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மும்பை இந்தியன்ஸ் அணியை ரூ.912.99 கோடிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெங்களூரு அணியை ரூ.901 கோடிக்கும், JSW GMR கிரிக்கெட் நிறுவனம் டெல்லி அணியை ரூ.810 கோடிக்கும், கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் லக்னோ அணியை ரூ. 757 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளன.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான ஒளிபரப்பு உரிமம் ரூ.951 கோடிக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. இந்த தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளது.
குஜராத் ஜெயண்ட்ஸ் அணித் தலைமை பயிற்சியாளர் ரேச்சல் ஹெய்ன்ஸ், பந்துவீச்சு பயிற்சியாளர் நூஷின் அல் காதீர், பேட்டிங் பயிற்சியாளர் துஷார் அரோத்தே, மற்றும் ஆலோசகர் மிதாலி ராஜ் ஆகியோரும், மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் தலைமை பயிற்சியாளர் சார்லோட் எட்வர்ட்ஸ், பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் வழிகாட்டி ஜூலன் கோஸ்வாமி, பேட்டிங் பயிற்சியாளர் தேவிகா பால்ஷிகார், மஹேல ஜயவர்தன ஆகியோர் அணியில் பங்கு வகிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல உ.பி வாரியர்ஸ் தலைமை பயிற்சியாளர் ஜான் லூயிஸ், உதவி பயிற்சியாளர்கள்: அஞ்சு ஜெயின் மற்றும் ஆஷ்லே நோஃப்கே மற்றும் ஆலோசகர் லிசா ஸ்தலேகர் ஆகியோரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் தலைமை பயிற்சியாளர் ஜொனாதன் பாட்டி, உதவி பயிற்சியாளர்கள் ஹேமலதா கலா மற்றும் லிசா கெய்ட்லி பீல்டிங் பயிற்சியாளர் பிஜு ஜார்ஜ் ஆகியோர் அணியில் பங்கு வகிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. அறிமுக தொடரில் மொத்தம் 22 போட்டிகள் நடைபெறும் எனவும், பர்போர்ன் மற்றும் டி.ஓய். பட்டேல் மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அதிகாரப்பூர்வ பாடலை போட்டி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
Jaagi hui shakti ab mere paas hai,
Dekho abhi, yeh toh bas shuruat hai!Sing along to the anthem lyrics video and don't forget to tune in to the #TATAWPL from the 4th of March, live on @Sports18 and @JioCinema!#YeTohBasShuruatHai #WomensPremierLeague #WPL2023 pic.twitter.com/uwaSdJtkaA
— Women's Premier League (WPL) (@wplt20) March 1, 2023







