முக்கியச் செய்திகள் சினிமா

கதைதான் முக்கியம்; ஹீரோ இல்லை: நடிகர் சிலம்பரசன்

வெந்து தணிந்தது காடு முற்றிலும் வித்தியாசமான gangster படம் என்றும் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த சிறுவன், மும்பைக்குச் சென்று இறுதியில் ஒரு கேங்ஸ்டராக மாறுவதைச் சுற்றி கதைக்களம் அமைத்திருக்கும்.

சிம்பு, எ.ஆர் .ரஹ்மான் மற்றும் கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகி ரசிகர்களின் பெரும் ஆரவாரத்துடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது வெந்து தணிந்தது காடு திரைப்படம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கவுதம் மேனன், சிம்பு காம்போ வில் விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களின் வரிசையில், தற்போது வெளியாகியுள்ள இந்த படம் இருவருமே இது வரை தேர்வு செய்யாத ஒரு Gangster கதைக்களம்.

சமீபத்தில் சிம்பு அளித்த பேட்டி ஒன்றில், மாநாடு படத்தின் மூலம் தான் மிக பெரிய ரிஸ்க் எடுத்ததாகவும் சவாலான ஒரு கதைக்களத்தைக் கொண்டிருந்த மாநாடு திரைப்படத்தினை ரசிகர்கள் எவ்வாறு வரவேற்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தன்னிடம் அதிகமாகவே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அப்படத்தின் வெற்றி, அடுத்து நடிக்கப்போகும் படத்தில் தான் முற்றிலும் இது வரை நடிக்காத கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்ற தன்மையைக்கையை தனக்குக் கொடுத்ததாகவும் கூறினார்.

மேலும், கவுதம் மேனன் தன் மேல் கொண்டிருந்த நம்பிக்கையால் ‘வெந்து தணிந்தது காடு’ சாத்தியமானதாகவும் சிம்பு தெரிவித்தார். வெந்து தணிந்தது காடு முற்றிலும் வித்தியாசமான gangster படம் என்றும் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த சிறுவன், மும்பைக்குச் சென்று இறுதியில் ஒரு கேங்ஸ்டராக மாறுவதைச் சுற்றி கதைக்களம் அமைத்திருக்கும். தனது ரசிகர்கள் வித்தியாசமான சிம்புவை திரையில் பார்ப்பார்கள் என்றும், தனது Comfort Zone ல் இருந்து வெளிவந்து தான் இந்த படத்தில் நடித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ஹீரோவைப் பற்றிய தனது பார்வையும் வரையறையும் இப்படம் மாற்றிவிட்டது என்றும், ஒரு படத்திற்குக் கதைதான் முக்கியம் என்றும் ஹீரோ இல்லை என்று கூறிய சிம்பு, ‘வென்று தணிந்தது காடு’ திரைப்படம் தன்னை எங்கும் ஹீரோவாகக் காட்டவில்லை என்றும், இயக்குநர் அதில் மிகவும் கவனமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அணியில் இடம் கிடைக்காத சோகம்: எல்லாம் மாறும் என கூறிய இளம் வீரர்!

EZHILARASAN D

நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!

Jeba Arul Robinson

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு – அரசுக்கு ராகுல் கோரிக்கை

Mohan Dass