சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ரோஜர் பெடரர் ஓய்வு

அடுத்த வாரம் நடைபெறவுள்ள லேவர் கோப்பை டென்னிஸ் தொடருக்குப் பிறகு தனது இறுதி போட்டியை விளையாடுகிறார் ரோஜர் பெடரர். 20 கிராண்ட்ஸ்லாம்களை வென்ற, டென்னிஸ் விளையாட்டில் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுகிறார் பெடரர். அடுத்த வாரம் லண்டனில்…

அடுத்த வாரம் நடைபெறவுள்ள லேவர் கோப்பை டென்னிஸ் தொடருக்குப் பிறகு தனது இறுதி போட்டியை விளையாடுகிறார் ரோஜர் பெடரர்.

20 கிராண்ட்ஸ்லாம்களை வென்ற, டென்னிஸ் விளையாட்டில் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுகிறார் பெடரர். அடுத்த வாரம் லண்டனில் நடைபெறும் லேவர் கோப்பை ஃபெடரர் பங்கேற்கும் கடைசி ஏடிபி நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

தனது 41 வயதில், டென்னிஸ் விளையாட்டை விட்டு வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று தான் உணர்கிறேன் என்று டுவீட் செய்துள்ளார்.

“எனக்கு 41 வயதாகிறது. நான் 24 வருடங்களில் 1,500-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளேன். டென்னிஸ் நான் கனவு கண்டதை விட தாராளமாக என்னை வழி நடத்தியது. இப்போது எனது டென்னிஸ் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டது, என்பதை நான் அடையாளம் காண வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் எனக்கு பக்கபலமாக நிற்கும் மனைவி மிர்காவுக்கு மேலும் எனது நன்றிகள்” என அவர் எழுதியுள்ளார். 
20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ரோஜர் தனது பெற்றோருக்கும் சகோதரிக்கும் தனது பிரியாவிடை கடிதத்தில் நன்றி தெரிவித்து, அவர்கள் இல்லாமல் இவை எதுவும் சாத்தியமில்லை என்று கூறியுள்ளார். மற்றும் தற்போது மற்றும் முன்னாள் பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

“டென்னிஸ் மீதான எனது காதல் தொடங்கியபோது, ​​நான் எனது சொந்த ஊரான பிசெலில் ஒரு பால் பாயாக இருந்தேன். நான் வீரர்களை ஆச்சரியத்துடன் பார்த்தேன். அவர்கள் எனக்கு ராட்சதர்களைப் போல இருந்தனர், நான் கனவு காண ஆரம்பித்தேன். என் கனவுகள் என்னை வழிநடத்தின. கடினமாக உழைக்க மற்றும் நான் என்னை நம்ப ஆரம்பித்தேன்” என அவரது கடிதத்தில் அவர் முடிவுரை எழுதியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.