முக்கியச் செய்திகள் சினிமா

வெளியானது ’நானே வருவேன்’ படத்தின் முதல் டீசர்!

தனுஷ் தற்போது நடித்துவரும் நானே வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். மேலும் அவரது சகோதரரும் திரைப்பட இயக்குநருமான செல்வ ராகவனால் இயக்கத்தில் உருவாகிவருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தை வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் செல்வராகவனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு முன்பு இருவரும் துள்ளுவதோ இளமை, கண்டு கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் இவர்கள் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது நானே வருவேன் படம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடலாக ‘வீரா சூரா’ பாடல் யுவனின் குரலில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் இன்று மாலை 6: 40 மணியளவில் சன் டிவி யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. மிகவும் வித்தியாசமான  இரண்டை வேடத்தில் தனுஷும் அவருடன் படத்தின் இயக்குநர் செல்வராகவனும் தோன்றியுள்ளனர்.

நானே வருவேன் திரைப்படம் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் மோதவுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30, அன்று திரையரங்குகளில் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நானே வருவேன் திரைப்படம் ஒரு நாள் முன்னதாக அதாவது செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரவிவருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சுகேஷ் சந்திரசேகருக்கு பிரபல நடிகை செல்ஃபி முத்தம்: வைரல் போட்டோவால் பரபரப்பு

Halley Karthik

திருச்சி அரசு பொறியியல் கல்லூரியில் 15 மாணவர்கள், ஒரு பேராசிரியருக்கு கொரோனா உறுதி

G SaravanaKumar

பாகிஸ்தான் அரசுக்கு இம்ரான் கான் 6 நாள் கெடு

Mohan Dass