மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கத்தில் நடன இயக்குநர் பிரபு தேவா நடிக்கும் புதிய திரைப்படம் ‘மூன் வாக்’. இப்படத்தின் மூலம் ஏ.ஆர். ரகுமான் நடிகராகவும் அறிமுகமாகிறார். மேலும் இப்படம் மூலம் 29 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பிரபுதேவா ஆகியோர் மீண்டும் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
முழுநீள நகைச்சுவை படமாக உருவாகிவரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், ஸ்வாமிநாதன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் இத்திரைப்படம் 2026 மே மாதத்தில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் ‘மூன் வாக்’ திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து அவரே பாடியுள்ள 5 பாடல்கள் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.








