கன்னியாகுமரி மாவட்டத்தில் தந்தையிடம் வைத்த கோரிக்கையை நிறைவேற்றிய மகன் !

கன்னியாகுமரி மாவட்டம் , தந்தையிடம் வைத்த கோரிக்கையை மகன் நிறைவேற்றினார் – பொதுமக்களை வைத்து தரைப்பாலம் பணியை துவங்கிய எம். பி க்கு பாராட்டு தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் பரளியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த…

கன்னியாகுமரி மாவட்டம் , தந்தையிடம் வைத்த கோரிக்கையை
மகன் நிறைவேற்றினார் – பொதுமக்களை வைத்து தரைப்பாலம்
பணியை துவங்கிய எம். பி க்கு பாராட்டு தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் பரளியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த
தரைபாலம் சேதம் அடைந்து, பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்வதற்கு சிரமப்பட்டு
வந்தனர். மேலும், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஆராட்டின் போது,
சாமியை இந்த வழியாக பக்தர்கள் எடுத்து சென்று வந்தனர். பாலம் சேதம் அடைந்த
இந்நிலையில், புதிய தரைபாலம் அமைக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
வசந்தகுமார் அவர்களிடம், ஊர் மக்களும் பக்தர்களும் கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆனால், அவரது அகால மரணத்தால் இந்த பணிகள் நடைபெறாமல் இருந்தன.
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான அவரது மகன் விஜய் வசந்த், இந்த
பணிக்காக பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூபாய்
எழுபத்தி ஐந்து லட்சம் ஒதுக்கப்பட்டது. மேலும், பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால், எம் பி கர்நாடகா சென்றிருக்கும் நிலையில், விரைந்து பணியை துவங்க
வேண்டும் என்பதால் பொதுமக்களை வைத்து பணியை துவங்கினார்.

கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.