கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பனை மரங்களை
அதிகரிக்கவும், பனை சார்ந்த பொருட்களை மக்கள் பயன்படுத்தும்
நோக்கில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், தோட்டக்கலை மற்றும் தேசிய தோட்டக்கலை
இயக்கம் சார்பில், நாகர்கோவில் ஸ்கார்ட் கிறிஸ்தவ கல்லூரியில் பனை
சார்ந்த பொருட்களின் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது. இந்த
கருத்தரங்கில் பனை ஓலையால் செய்யப்பட்ட பாய்கள், கூடைகள், பைகள்,
பனங்கற்கண்டு, நுங்கு மற்றும் கருப்புக்கட்டி போன்ற பொருட்கள்
காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பி. என். ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றி
துவக்கி வைத்தார். பின்னர், பனை சார்ந்த பொருட்கள் அடங்கிய
கையேட்டை வெளியிட்டார். மேலும், நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட
ஆட்சியர்” பனைத் தொழிலை ஊக்குவிக்க அரசு மானியம் வழங்கி
வருகிறது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பனை சார்ந்த
பொருட்களை பயன்படுத்துவதால், பொதுமக்களுக்கு எந்த விதமான ஆபத்தும்
கிடையாது.மேலும், அழிந்து வரும் பனை மரங்களை காக்க, அதிக அளவில்
பனை மரங்கள் நட்டு அதனை பெருக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்
என்றார்.மேலும், ஏராளமானவருக்கு பனை விதைகளையும் அவர் வழங்கினார்.
கு.பாலமுருகன்







