முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

நிறைவுபெற்றது மாமன்னன் படப்பிடிப்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘ மாமன்னன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதுமட்டுமல்லாமல் நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மாமன்னன் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இது தொடர்பான தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் மாரி செல்வராஜ், “மாமன்னன் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. அத்தனையும் சாத்தியப்படுத்திய உதயநிதி ஸ்டாலினுக்கும், ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கும் நன்றி எனவும், பெரும் உழைப்பை கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் அன்பும் பிரியமும்” என்று கூறியுள்ளார். மேலும், படப்பிடிப்புத் தளத்தில் உதயநிதி, வடிவேலு, மாரி செல்வராஜ் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்து டப்பிங், எடிட்டிங் பணிகள் நடைபெறவுள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்து இந்த படமானது விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Niruban Chakkaaravarthi

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ராகுல் காந்தி சொல்லும் யுக்தி என்ன?

Gayathri Venkatesan

7 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த நபர்!

Jayapriya