முக்கியச் செய்திகள் சினிமா

மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு

படக்குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி  கொண்டாடினார் நடிகர் வடிவேலு. 

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

தற்போது சேலத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ்,  பஹத் பாசில், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ் குமரன் மற்றும் மாமன்னன் படக்குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி  கொண்டாடினார். அனைவரும் தங்களது வாழ்த்துக்களை நடிகர் வடிவேலுவிற்கு தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 4,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்

G SaravanaKumar

அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து – 8 பேர் பலி

Web Editor

சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி விற்பனை செய்த தந்தை, மகன் கைது

Web Editor