புதிய நாடாளுமன்றத்திற்கு அம்பேத்கர் பெயர்: தெலங்கானா தீர்மானம்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு சட்ட மேதை அம்பேத்கர் பெயரை சூட்டக்கோரி தெலங்கானா சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தெலங்கானாவில் சட்டப் பேரைவ கூட்டம் நேற்று நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமான பணி இறுதிக்கட்டத்தில்…

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு சட்ட மேதை அம்பேத்கர் பெயரை சூட்டக்கோரி தெலங்கானா சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தெலங்கானாவில் சட்டப் பேரைவ கூட்டம் நேற்று நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமான பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த ஆண்டு இறுதியில், புதிய நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு சட்ட மேதை அம்பேத்கர் பெயரை சூட்டக்கோரி தெலங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை மந்திரி கே.டி.ராமாராவ் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரை சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று அவர் கூறினார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ‘புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அம்பேத்கரின் பெயரை சூட்டுவதை விட சிறந்த நபர் வேறு யாருமில்லை,’ என்று முதல்வர் சந்திரசேகர ராவ் கூறினார். இதைத் தொடர்ந்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யும் ஒன்றிய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்யும்படியும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.