தள்ளிப்போனது ‘லால் சலாம்’ ரிலீஸ்! -லேட்டஸ்ட் அப்டேட்

விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவான ‘லால் சலாம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  கடந்த 2012-ம் ஆண்டு நடிகர்  தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்…

விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவான ‘லால் சலாம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  கடந்த 2012-ம் ஆண்டு நடிகர்  தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.  இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த  ”வை ராஜா வை” என்ற படத்தையும்  இயக்கினார்.

இந்த நிலையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம்.  விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.  இத்திரைப்படத்தில்  நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கின்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: மணிகண்டனின் ’லவ்வர்’ பட டீசர் வெளியானது!

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள  இந்தப் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடித்துள்ளார்.  மேலும் லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  அதனைத் தொடர்ந்து இத்திரைப்படத்தின் “தேர் திருவிழா” என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது.

அதனைத் தொடர்ந்து லால் சலாம் 2024-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால், லால் சலாம் படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் தான் முடிந்துள்ளது.  இதனால் தற்போது இந்தப் படத்தின் எடிட்டிங் வேலைகள் முழுமையாக முடியவில்லை எனத் தெரிகிறது.  இதன் காரணமாக  லால் சலாம் திரைப்படம்  ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.