தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த அமரன், மதராஸி ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பின. அதிலும் அமரன் திரைப்படம் உலக அளவில் 300 கோடி வரை வசூலித்து மிரட்டியது. இந்த நிலையில் தற்போது சிவாகர்த்திகேயன் இறுதிச்சுற்று, சூரரை போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கொராவின் இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிராகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து இதுவரை வெளியான நெஞ்சு குழி, ரத்னமாலா, நமக்கான காலம் ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் ஜனவரி 14ம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 10ம் தேதி சனிக்கிழமை இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் கடைசியான திரைப்படமாக உருவாகியுள்ள ஜன நாயகன் ஜன.9ஆம் தேதி வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.








