இளைஞரின் உயிரை பறித்த #Reels மோகம்… நடந்தது என்ன?

வாயில் பாம்பை வைத்து ரீல்ஸ் எடுத்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் காணொலிகளை வெளியிடுவதை பெரும்பாலானோர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.  இந்த காணொலிகளுக்கு சமூக வலைதளத்தில் அதிகமான…

The #Reels craze that cultivated a young man's life... what happened?

வாயில் பாம்பை வைத்து ரீல்ஸ் எடுத்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் காணொலிகளை வெளியிடுவதை பெரும்பாலானோர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.  இந்த காணொலிகளுக்கு சமூக வலைதளத்தில் அதிகமான லைக்குகள் கிடைப்பதால் பலர் ஆர்வமுடன் ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்கள். சினிமா பாடலுக்கு நடனமாடுவது,  சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளை தத்ரூபமாக நடித்து ரீல்ஸ் வெளியிடுவது உள்பட புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.  அதே நேரத்தில் சிலர் ரீல்ஸ்காக உயிரையும் பணயம் வைக்கிறார்கள். அந்த வகையில், ஆபத்தான முறையில் மேற்கொள்ளப்பட்ட சாகசங்களால் பறிபோன உயிர்கள் ஏராளம். 

இந்த சூழலில், தெலங்கானாவில் ரீல்ஸ்காக வாயில் பாம்பை கடித்து சாகசம் செய்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள தேசாய்பேட் கிராமத்தை சேர்ந்தவர் கங்காராம். இவர் ஒரு பாம்பு பிடி வீரர் என்று கூறப்படுகிறது. இவரது மகன் சிவ ராஜூ (20). சிவ ராஜூ 5 அடி நீளமுள்ள பாம்பின் தலையை தன் வாயில் வைத்து வீடியோ எடுத்துள்ளார்.

மேலும் பாம்பை வாயில் வைத்து கடித்து கொண்டே ஸ்டைலாக தலைமுடியை வாரி போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் போது பாம்பு கடித்ததை உணராத இவர், விஷம் தலைக்கேற சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இப்படி செய்ய வேண்டாம் என்று பலர் அந்த இளைஞருக்கு அறிவுறுத்தல் வழங்கியும் அதை பொருட்படுத்தாமல், லைக்குகளுக்காக இப்படி செய்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.