செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக சென்னை வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு வழிநெடுகிலும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள நன்றி மடலில் கூறப்பட்டுள்ளதாவது:
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ். வரவேற்கும் நிகழ்ச்சியா ? வந்திருக்கும் எழுச்சியா? தமிழ்நாட்டு மக்கள் மீது தனிப்பட்ட அன்பும், மரியாதையும், பாசமும் கொண்டிருக்கும் பிரதமருக்கு, தமிழ்நாட்டு மக்கள் தந்த ஆரவாரமான வரவேற்பு, அவருக்கு மிகுந்த உற்சாகத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியது
பாஜகவினர் அனைவரும் திரண்டிருந்தாலும், மக்கள் ஆதரவின்றி இதுபோல் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியிருக்க முடியாது. பிரதமருக்கான வரவேற்பு கட்சி ஏற்பாடாக இல்லாமல் மக்கள் எழுச்சியாக அமைந்தது மிகச்சிறப்பு.
சங்கடங்களுக்கு இடம் தராமல், கண்ணியத்துடன் பாஜக நடத்திக் காட்டியிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சி, கலகலப்பான கல்யாண மகிழ்ச்சி.
வெற்றிகரமான வரவேற்பை நிகழ்த்திக்காட்டிய அனைவரின் கைகளையும் என் கண்ணில் ஒற்றிக்கொள்கிறேன்…ஆனந்தக் கண்ணீர் துடைக்க !
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி, வாழ்த்துகள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.








