நடிகர் விஷால் தான் லியோ படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கான காரணத்தை மனம் திறந்து கூறியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மிஷ்கின், சஞ்சய் தத் இருவரும் வில்லன்களாக நடிப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.
லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் இன்றளவும் டிரெண்டிங்கில் இருக்கிறது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.
இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 23-ம் தேதி நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் எடிட்டிங் பணிகளைத் தொடர்ந்து அடுத்ததாக விஎஃப்எக்ஸ் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதன்பின், டப்பிங் மேற்கொள்ளபட உள்ளது. அக்டோபர் 19-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் தரத்தை தீவிரமாக மெறுகேற்றி வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தில் முதலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஷாலிடம்தான் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால், விஷால் லியோவில் இணையவில்லை. காரணம், அவர் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வந்தார். தற்போது விஷால், “லியோ படத்திற்காக 4 மாதங்கள் கால்ஷீட் தேவை என லோகேஷ் சொன்னார். ஆனால், நான் மார்க் ஆண்டனியில் நடித்துக்கொண்டிருந்ததால் என்னால் அப்படத்தில் இணைய முடியவில்லை. என் சூழலை லோகேஷ் புரிந்துகொண்டார்’ எனக் கூறியுள்ளார்.







