ஆப்கானிஸ்தான் பிரபல தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்தவர் தற்போது சாலையில் சமோசா விற்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது முதல் அந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாகப் பலர் வேலைவாய்ப்பின்றி வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த நிலையில், தலிபான் அமைப்பு ஆட்சியைப் பிடித்ததால் அந்த நிலை இன்னும் பல தாக்கத்தை அந்த மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், சுமார் 230 ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், பிரபல ஊடகங்களில் செய்தியாளராக நெறியாளராக பணிபுரிந்து வந்த மூசா முகமதி, என்கிற பத்திரிகையாளர் சாலையோரம் சமோசா விற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்படுகிறது. தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அங்கு வசித்து வந்த மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால் தான் பிரபல பத்திரிக்கையாளர் வேறு வருமானம் இல்லாமல் தன் குடும்பத்திற்காகச் சாலையோரத்தில் சமோசா விற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறார் எனச் சொல்லப்படுகிறது.
அண்மைச் செய்தி: ‘விரைவில் முழுத்திரையில் இன்ஸ்டாகிராம் வீடியோ’
இதுதொடர்பான புகைப்படத்தை கபீர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இவர்தான் மூசா முகமதி ஆப்கானிஸ்தானில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் நிருபராக, நெறியாளராக பணியாற்றிவர். பன்முக திறமை கொண்ட இவர் இப்போது வேலை வாய்ப்பை இழந்து வருமானமின்றி வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு தெருவோரம் சமோசா விற்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் பரவலாகப் பரவியதையடுத்து, ஆப்கான் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி இயக்குநர் ஜெனரல் அகமதுதுல்லா வாஷிக், மூசா முகமதிக்கு பணி வாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.