முக்கியச் செய்திகள் இந்தியா

“ராணுவத்தில் ஒப்பந்தக் கூலியில் ஆட்களை எடுக்க துணிந்திருக்கிறது மத்திய அரசு” – சிபிஐ(எம்) விமர்சனம்

“ராணுவத்தில் ஒப்பந்தக் கூலியில் ஆட்களை எடுக்க துணிந்திருக்கிறது மோடி அரசாங்கம். இது மிகப் பெரிய மோசடி” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

17 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம் என பாதுகாப்புத்துறை சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் இந்த திட்டத்திற்கு அக்னிபாத் (அக்னி பாதை) என பெயரிடப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால் இவர்களில் 75 சதவிகிதமானோர் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. ரயில்கள் எரிக்கப்பட்டன. தெலங்கானாவில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பதட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இத்திட்டத்தின் கீழ் விரைவில் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் தெரிவித்தார்.

சூழல் இவ்வாறு இருக்க, அக்னிபாத் திட்டம் தேசத்திற்காக உருவாக்கப்பட்டது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கடற்படை தளபதி ஹரி குமார் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில், “ஆபத்தான சூழலில் இருந்து நாட்டை பாதுகாக்கும் உட்சபட்ச கடமையை ஆற்றுவோர் ராணுவ வீரர்களே. அந்த பணியிலும் கூட, 4 ஆண்டுகள் ஒப்பந்தக் கூலியில் ஆட்களை எடுக்க துணிந்திருக்கிறது மோடி அரசாங்கம். இது மிகப் பெரிய மோசடி.” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

மேலும், “ஓய்வூதியம், பணிப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுத்து நிரந்தரமற்ற சூழலில் 4 ஆண்டுகளுக்கு பின் கைவிடப்படும் வீரரின் நிலை என்ன ஆகும்?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

“ராணுவ வீரர்களுக்கே இதுதான் நிலை என்றால், மற்ற பல துறைகளிலும் இதை விட மோசமான நிலை அல்லவா ஏற்படுத்தப்படும். இந்த அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பது, மகத்தான தேசபக்த கடமை. அனைவரும் ஓரணியில் நின்று எதிர்ப்போம்.” என்றும் கூறியுள்ளார்.

மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் 12 ரயில்கள் எரிக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 200க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“ரேஷன் கடைகளில் கைரேகை வைப்பதில் கோளாறா?”-எம்.எல்.ஏ. பரந்தாமன் கேள்வி

Saravana Kumar

டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து உயிரிழந்த ஒப்பந்த ஊழியர்!

அதிமுகவின் மூன்று பயணங்கள்

Web Editor