நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, மதுக்கூர் குளம் தூர்வாரப்பட்டதற்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, மதுக்கூரில் இருந்த சங்கினி குளத்தை காணவில்லை என சிவசேனா கட்சி சார்பில், காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்த செய்தி நியூஸ் 7 தமிழில் ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில், குப்பை கழிவுகளால் நிறைந்திருந்த சங்கினி குளம், 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மதுக்கூர் பேரூராட்சி சார்பில் தூர்வாரப்பட்டுள்ளது. பிளாஸ்டிக், பழைய இரும்பு பொருட்கள், மருந்து மற்றும் உணவு கழிவுகள் சூழ்ந்து சுகாதார சீர்கேட்டோடு இருந்த குளம் பேரூராட்சி தூர்வாரியதன் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு அரசுக்கு, பேரூராட்சிகளின் ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். அதில், குளத்தை காணவில்லை என்ற செய்தி நியூஸ் 7 தமிழில் ஒளிபரப்பப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சங்கினி குளம் தூர்வாரப்பட்டதற்கு, அரசுக்கும், நியூஸ் 7 தமிழுக்கும் மதுக்கூர் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.







