மக்களவையில் பொதுத்தேர்வு திருத்த மசோதா நிறைவேற்றம்!

மக்களவையில் பொதுத்தேர்வு திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நிலையில் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாள் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டதால் நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் தேர்வு அழுத்ததால் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சார்ந்த 10-க்கும் மேற்பட்டோரை சிபிஐ கைது செய்துள்ளது.

இந்த நிலையில் நீட் வினாத்தாள் குளறுபடிக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது. போராடிய மாணவர்கள் மீது டெல்லி போலீசார் மற்றும் துணை ராணுவப்ப்டையினர் தடியடி, துப்பாக்கிச் சூடு போன்ற தாக்குதல்களை நடத்தினர்.

இதனையடுத்து மாணவர்களுக்கு ஆதரவாக மும்பை, தமிழ்நாடு, கொல்கத்தா என நாடும் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. இதனிடையே வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளை தடுக்க பொதுத்தேர்வு திருத்த மசோதாவை கொண்டு வர உள்ளதாக மத்திய அரசு அறிவித்தத்.

இந்த நிலையில் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்ததால் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் கடும் அமளிக்கு இடையே பொத்தேர்வு திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது.

இந்த மசோதா மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்ர். இதனையடுத்து பொதுத்தேர்வு திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டு சிறை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.