26.7 C
Chennai
September 27, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஒன்றரை வருடத்திற்கு முன்பு நடந்த பிரச்னை,பாஞ்சாகுளத்தில் நடந்தது இதுதான்?-ஆட்சியர் விளக்கம்

பள்ளி மாணவர்கள் கடையில் சாக்லேட் வாங்குவதற்கு வந்தபோது, கட்டுப்பாடு போடப்பட்டுள்ளதாக சாதிய ரீதியில் பேசியதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் விளக்கமளித்துள்ளார். 

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகேயுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள்  சாக்லேட் வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளனர். ஆனால் கடைக்காரர் தின்பண்டங்கள் வழங்க முடியாது எனக் கூறியுள்ளார். ஏன் கொடுக்க முடியாது என பள்ளி சிறுவர்கள் கேட்க, ”ஊரில் கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து, மாவட்ட ஆட்சியர் தற்போது விளக்கமளித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில் மஜரா பாஞ்சாகுளத்தில் பட்டியல் இன பறையர் சமுதாய மக்களின் குழந்தைகளுக்கு யாதவர் இனத்தைச் சேர்ந்தவரின் கடையில் எவ்வித திண்பண்டங்களும் வழங்க கூடாது எனக் கூறி வாட்ஸ்-அப்- மூலம் வீடியோ பதிவு பரவியதை தொடர்ந்து,
உடனடியாக விசாரணை செய்யப்பட்டது.

இதில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு யாதவர் சமுதாயம் மற்றும் பட்டியல் இன பறையர் சமுதாய மக்களுக்கு இடையே நடந்த பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கானது இன்று வரையிலும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தற்போது யாதவர் சமுதாயத்தை சேர்ந்த கருப்பசாமி
மகன் ராமகிருஷ்ணன் என்பவர் மத்திய அரசு பணிக்கு தேர்வாகியுள்ள நிலையில் யாதவர் சமுதாய மக்கள் பறையர் சமுதாய மக்களிடம் சென்று ராமகிருஷ்ணன் என்பவர்
மேல் உள்ள வழக்கினை வாபஸ் பெற கேட்டுள்ளனர்.

இதற்கு பறையர் சமுதாய மக்கள் தங்கள் சமுதாயத்தினர் மேல் யாதவர் சமுதாய மக்களால் போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்றால் மட்டுமே பதிலுக்கு ராமகிருஷ்ணன் (இந்துயாதவர்) மேல் போடப்பட்டுள்ள வழக்கினை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மேற்கண்ட கிராமத்தில் உள்ள யாதவர் சமுதாய நாட்டாண்மை திருமகேஷ் த-பெ சுந்தரைய்யா என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் பறையர் சமுதாய சிறுவர் சிறுமிகள் திண்பண்டங்கள் கேட்டதற்கு தர மறுத்துள்ளதாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவியுள்ளது.

இந்நிகழ்வு தொடர்பாக கரிவலம் வந்தநல்லூர் காவல்நிலைய குற்ற எண்.377/2022
பிரிவு 153 Class A IPC நாள் 17.09.2022 ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் மகேந்திரன் மற்றும் இராமச்சந்திரன் என்ற மூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேற்கண்ட சம்பவம் குற்ற விசாரணை முறைச்சட்டம் 1973 பிரிவு 133(1) (ஆ) ன் கீழ் வருவதால் மகேஷ் த-பெ சுந்தரைய்யா என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடை சங்கரன்கோவில் வட்டாட்சியரால் இன்று(17.09.2022) தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

-பரசுராமன்.ப

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

பிரபல மல்யுத்த வீரருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

Halley Karthik

குழந்தைகள் மீதான ஆன்லைன் சுரண்டலை தடுக்க தொடங்கப்பட்ட புதிய செயல்திட்டம்

Web Editor

மனைவியை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த கணவர்

Web Editor