வாகனங்களை வாகன நிறுத்த இடங்களில் நிறுத்தாமல் இருந்தால் நடவடிக்கை-சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் வாகனங்களை நிறுத்தாமல் விதிமீறும் வாகன உரிமையாளர்கள் மீது மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.…

பெருநகர சென்னை மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் வாகனங்களை நிறுத்தாமல் விதிமீறும் வாகன உரிமையாளர்கள் மீது மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் வாகனங்களை நிறுத்துவதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் 80 இடங்களில் 7000 வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு இடங்கள் கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வாகன நிறுத்தம் இல்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாக மாநகராட்சிக்கு புகார் கிடைக்கப்பெற்றுள்ளன.
வாகன நிறத்த இடங்களில் ஏற்படும் விதி மீறல்களை கண்டறிய காவல் துறையினர் மற்றும் மாநகராட்சியை சேர்ந்த குழுவினர் ரோந்து பணி மேற்கொள்கின்றனர்.
வாகன நிறுத்தம் இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு முறையான கட்டணத்தை வாகன உரிமையாளர்கள் செலுத்த வேண்டும்.

இந்த வாகன நிறுத்த இடங்கள் குறித்த விவரங்களை பெருநகர சென்னை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/pdf/ECS.pdf என்ற இணையதள இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வாகன நிறுத்த இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 எனவும், இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.5 எனவும், வணிக வளாகப் பகுதியான தியாகராய நகர், பாண்டி பஜார் வாகன நிறுத்தத்தில் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.60 எனவும், இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.15 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.