முக்கியச் செய்திகள் தமிழகம்

கடந்த 10 ஆண்டுகளில் அதிக சிலை கடத்தல் வழக்குகள் பதிவு

கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஆண்டு தான் அதிக சிலை கடத்தல் வழக்குகளை  தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவ்ல்துறையினர் பதிவு செய்துள்ளனர். அதுகுறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 3 கற்சிலைகள் உள்ளிட்ட 4 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சிலையை வெளிநாட்டில் இருந்து மீட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2020 ஆம் ஆண்டு 14 வழக்குகளை பதிவு செய்யப்பட்டு 53 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 85 உலோக சிலைகளும், 45 கற்சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட 3 சிலைகளும் மீட்கப்பட்டன. 2020 ஆம் ஆண்டு மட்டுமே 130 சிலைகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 28 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 31 உலோக சிலைகளும், 6 மரத்திலான சிலைகளும் 2 கற்சிலைகளும், 5 கலைப் பொருட்களும் உள்ளிட்ட 45 சிலைகள் மீட்கப்பட்டன.

இந்தாண்டு (2022) ஆம் ஆண்டு 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 81 உலோக சிலைகள், 5 மரச்சிலைகள், 14 கற் சிலைகள், 62 கலைப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து 10 சிலைகள் உள்பட 187 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, விழுப்புரம் மாவட்டம், பொம்மையார்பாளையம் கன்னிகா கார்டனில் உள்ள மெட்டல் கிராப்ட்ஸ் கடை உரிமையாளர் டி.ஆர்.கண்ணியனின் மகன் டி.ஆர்.ராமச்சந்திரன் (42) என்பவரின் வளாகத்தில் நடந்த சோதனையில், அர்த்தநாரீஸ்வரர் சிலை இருப்பதாக இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கூறிய ஆவணத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றினர்.

69/2016 அன்று சந்தேகத்திற்குரிய பழங்காலப் பொருளாக ASI முன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆவணம் கடையில் பழங்காலப் பொருட்களைக் கடத்தியதை உறுதி செய்ததால், சிலை கடத்தல் தடுப்பு குழுவினர் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியபோது, கடைக்குள் உரிமையாளர் ரகசியமாக மறைத்து வைத்திருந்த பழங்கால சிலைகள் சிதறி வெளியே வந்தன. சோதனை முடிந்ததும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு குழுவினர் பின்வரும் ஏழு பழமையான சிலைகளை கைப்பற்றினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னையில் தங்கம் விலை குறைந்தது

EZHILARASAN D

புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்… திண்டுக்கல் அருகே பைக் மீது லாரி மோதி விபத்து!

Saravana

“தேர்தல் அரசியலை தாண்டி சேவை அரசியலை முன்னெடுக்கிறேன்”:சைதை துரைசாமி

Halley Karthik