“மேகதாது அணையை கட்ட மாட்டோம் என பிரதமர் உறுதி அளிக்க வேண்டும்” – டி.ஆர்.பாலு

“மேகதாது அணையை கட்ட மாட்டோம் என பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்” – தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், அவையில் எழுப்ப…

“மேகதாது அணையை கட்ட மாட்டோம் என பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்” – தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், அவையில் எழுப்ப வேண்டிய கேள்விகள் குறித்து இன்று அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு பேட்டியில் கூறியுள்ளார்.

செய்தியளர்களுக்கு அளித்த பேட்டியில் “கூட்டத்தொடர் 19 நாட்கள் மட்டுமே நடக்க இருக்கும் நிலையில், “31 மசோதாக்கள் நிறைவேற்ற இருப்பது தொடர்பாகவும், நாடாளுமன்ற அவை உறுப்பினர்களின் தேரத்தை குறைத்துள்ளது தொடர்பாகவும் கேள்வி எழுப்பினோம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாகவும்,  மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்படும். ஏற்கெனவே மத்திய அரசு பதில்கள் சில கூறியிருந்தாலும், அவற்றை நாடாளுமன்றத்தில் தெளிவுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். பெட்ரோல் & டீசல் விலை உயர்வு குறித்தும், இந்திய – சீன எல்லை பிரச்சனை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானமும் கொடுத்துள்ளோம்.” என்று கூறியுள்ளார்.

மேலும், “மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை நம்ம முடியாது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விரிவாக பேச வேண்டும். முக்கிய விஷயங்கள் குறித்து பேச கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ் பலமுறை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு அதுகுறித்து பேசவில்லை. ஜி.எஸ்.டி, நியூட்ரினோ விவகாரம் குறித்து கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து, “கொரோனா தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் பவர் பாயின்ட் விளக்கத்தை பிரதமர் தனியாக தருவார் என கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். கொரோனா தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். ஆனால், கொரோனா தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிப்பார்களா என்பதில் சந்தேகம் உள்ளது.”

“தேசத்துரோக வழக்கு, சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி உயிரிழப்பு குறித்தும் நாடாளுமன்றத்தில் பேசவுள்ளோம். கொரோணாவை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும் என்ற மனநிலை மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து போதிய தடுப்பு மருந்து கிடைக்கவில்லை. 12 கோடி டோஸ் தடுப்பு மருந்து தேவையுள்ள மாநிலத்தில் 1.75 கோடி டோஸ் தடுப்பு மருந்து மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை விகிதாச்சாரம் அடிப்படையில் தடுப்பூசி வழங்க வேண்டும். இது குறித்தும் கேள்வி எழுப்புவோம். மேகதாது அணை கட்ட மாட்டோம் என்பது தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும் ஆனால் மேகதாது அணை தொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுதி அளிப்பாரா என்பது தெரியாது” என்று டி.ஆர்.தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.