சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
கொரோனா பரவல் காரணமாக சிறப்பு அழைப்பாளர்களுக்கு செயற்குழுவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை. இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தலைமையில் அதிமுகவை வலுப்படுத்துவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படும் எனக் கூறப்படுகிறது.
மழை வெள்ள பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், வேதா நிலைய விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்ற தொண்டர்கள் உழைக்க வேண்டும் உள்ளிட்டவை தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகக் கூறப்படுகிறது.








